அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று பாமக கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சௌமியா அன்புமணி 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களை கைது செய்ய முதல் ஆளாக வரும் காவல்துறை பெண் குழந்தைகளை காப்பாற்றவும் முதல் ஆளாக சென்று இருக்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில் வட இந்தியாவை போல் தமிழகமும் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில் எப்படி எங்கள் குழந்தைகளை நாங்கள் வெளியே அனுப்ப முடியும். உங்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருக்கிறது. எங்கள் போராட்டத்தால் தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அடிக்கடி குற்றம் செய்யக்கூடிய மனநிலையை கொண்டவர் ஞானசேகரன். இவரை எதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை. மேலும் அதுவும் போதையும் தான் குற்றங்கள் நடைபெற காரணம் என்று கூறினார்.