குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை ஒன்று இரண்டு முக்குகளுடன் பிறந்தது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் 8000 முதல் 15 ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்று இரண்டு மூக்குகளுடன் பிறக்கும். குழந்தை மருத்துவர் பட்டேல்  என்பவர் கூறுகையில், “ஜெனிடிக் பாதிப்பால் இது போன்று இரண்டு மூக்குகளுடன் குழந்தை பிறந்திருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால் அறுவை சிகிச்சை மூலம் இதனை சரி செய்ய முடியும். தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. குழந்தை உடல்நிலை சீரானதும் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்