நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு சர்ச்சைகளுக்கு இடையே, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி எழுதிய மறுதேர்வு முடிவிலும் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, தேசிய தேர்வு முகமையின்  இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஓஎம்ஆர்நகலில் வினாக்களின் வரிசை மாறியிருந்துள்ளது. இது தொடர்பாக மாணவி ஆரியா சிங் உடனடியாக அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட தேர்வு முகமை, அந்த ஓஎம்ஆர் நகலைத் திருத்தி மீண்டும் வெளியிட்டது.

ஆனால், உண்மையான பிரச்சனை தேர்வு முடிவுகள் வெளியான அன்றிரவுதான் தொடங்கியுள்ளது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பின்படி  கணக்கிட்ட போது, மாணவி ஆரியா சிங்கிற்கு 609 மதிப்பெண்கள் வர வேண்டும். ஆனால், முடிவுகள் வெளியான அன்று இரவு இணையதளத்தில் அவருக்கு 540 மதிப்பெண்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் சோதித்துப் பார்த்தபோது, அந்த மதிப்பெண் அதிரடியாகக் குறைந்து வெறும் 167 ஆக மாறியதைக் கண்டு அம்மாணவியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Little Letters Linked (@littleletterslinked)

இதுமட்டுமன்றி, திருத்தத்திற்கு முன்பாக ஓஎம்ஆர் தாளின் வரிசை எண், திருத்தத்திற்குப் பிறகு வேறு விதமாக மாறியுள்ளதாக ஆத வீடியோ வெளியிட்டு மாணவி ஆரியா சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது இணையதளத்தில் 167 மதிப்பெண்கள் மட்டுமே காட்டுவதா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அம்மாணவியும் அவரது குடும்பத்தினரும், இது குறித்து உரிய நடவடிக்கை கோரி பிரதமர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.

மாணவியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நோக்கிச் சரமாரி கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “தேசிய தேர்வு முகமை நாட்டின் ‘தேசிய அதிர்ச்சி முகமை’ ஆக மாறிவிட்டது” எனச் சாடியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியோ, “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே… நீட் மறுதேர்வு நடத்துவதற்காக நீங்கள் விமானப் படையைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்த சிஸ்டம் இதுதானா?” எனக் காட்டமாக வேட்பாளர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.