+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன்
கேள்வி எழுப்பினார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். அதில், அன்பில் மகேஷ் கூறியதாவது, 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிவு செய்த அனைவரும் கொரோனா காரணமாக தேர்ச்சி பெற்றனர்.

தற்போது 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள்
தான். கொரோனாவுக்கு முன்பும் சராசரியாக 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என
விளக்கமளித்தார்.