மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களின் சராசரி வருவாய் 50 சதவீதம் உயர்ந்துள்ளது, 2027 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடு என்ற கனவை எட்டும், நான்கு கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு மாதங்க ஒரு 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு, மீன்வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.