ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.. ஹமாஸ் அமைப்பிடம் 199 பேர் பிணை கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கு காரணமாக இருப்பது தற்போது 199 பேர் என புதிதாக அறிவித்துள்ள பிணைய கைதிகள் தான்.. இவர்களை விடுவிக்கும் வரை அடுத்த கட்டமாக போரை நிறுத்துவது பற்றியோ, அல்லது படைகளுடைய எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ எந்த முடிவுக்கும் வர முடியாது என இஸ்ரேல் ராணுவம் தெளிவாக கூறியுள்ளது. இந்நிலையில் தான் 155 இல் இருந்து 199 ஆக பிணைய கைதிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் இஸ்ரேலை சேர்ந்தவர்கள்.. காசா பகுதிகளில் குறிப்பாக சுரங்கம் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் இவர்களை பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்களை மீட்பதற்காகத்தான் வடக்கு நோக்கி முற்றுகை தொடர்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இஸ்ரேல் பகுதிகளில், எல்லா நகரங்களிலும் சைரன் ஒலிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. காசா நகரத்திலிருந்து ஹமாஸ் அமைப்பினரோ, ஹிஸ்புல்லா அமைப்பினரோ ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல் அடிப்படையில், இஸ்ரேலில் ஏற்கனவே அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் பதுங்கு குழிகளிலோ, அல்லது அரசாங்கத்தில் இருக்கும் பெரிய கிடங்குகள், பதுங்கு குழிகளிலோ (இஸ்ரேலில் இதுபோன்று சம்பவம் எப்போதாவது நடைபெறும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்டது) தஞ்சமடை வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பதட்டமான சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பெருமளயில் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வினியோகம் தெற்கு காசா பகுதியில் விநியோகிக்கப்பட்டாலும் அங்கு பைப் லைன்கள் உடைக்கப்பட்டதன் காரணமாக மக்களுக்கு போதிய அளவில் சென்று சேரவில்லை என்று கவலையையும் ஐநா தெரிவித்துள்ளது. எங்களுக்கு என்ன வழி செய்வது என்று தெரியவில்லை என வெளிப்படையாகவே ஐநாவின் பொது செயலாளர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். எங்களுக்கு உதவி தேவை, பாதுகாப்பான இடங்கள் பற்றிய தெளிவு தெரியவில்லை. குறிப்பாக மக்களை வெளியேற்றுவதற்கு தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என்று கவலையை தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் போன்ற மத தலைவர்கள், கிறிஸ்துவ மத தலைவரும் இந்த காசா பிரச்சனை குறித்து தங்கள் கவலையை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஹமாஸ் வசம் இருக்கும் பிணைய  கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இஸ்ரேல்.

அதேநேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கன் மீண்டும் இஸ்ரேல் சென்றுள்ளார் ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் தரை வழியாக 2 படைகள் வான் வழியாக ஒரு படை மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு இருக்கும் வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்ய முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.