செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அரசியலமைப்பு சட்டப்படி மேதகு ஆளுநர் கரெக்டா செயல்பட்டு இருக்கார். அதிகாரம் என் கையில இருக்கு. உங்களை இன்னைக்கு அனுப்பிச்சா என்ன ? நாலு நாள் கழிச்சு அனுப்புச்சா  என்ன  ? ரெண்டும்  ஒன்னு தான். ஒரு மாநிலத்தில சீஃப் எக்ஸிக்யூட்டிவ்…  தலைமை நிர்வாகினா… தமிழ்நாட்டுல திராவிட ஸ்டாக்கா ? அந்த ஸ்டாக்லாம் பரப்புற பொய்யால் அதிகாரம் படைத்தவர் முதல்வர் என்கிறார்கள் நோ!

அரசியலமைப்பு சட்டம்படி மாநிலத்தில் முதல் அதிகாரம் கவர்னருக்கு தான் உண்டு. முதலமைச்சரோட  பரிந்துரையையேற்று  அமைச்சர்களை நியமிக்கலாம். 1979-இல்  கருணாநிதி VS யூனியன் ஆப் இந்தியா &  OTHERS. அந்த ஜட்ஜ்மெண்ட்ல…  Y.V சந்திரசூட் அவர்கள் தலைமையில ஐந்து பேர்  அரசியலமைப்பு பெஞ்சோட தீர்ப்பு இருக்குது.  அந்த தீர்ப்பினுடைய  55- ஆவது பாயிண்ட்டை  நான் சொல்றேன்…  நீங்க நெட்ல வெரிஃபை பண்ணிக்கலாம்.

இங்க இருக்கிற ஈ.வே.ரா.வின் ஆதரவாளர்கள் என்கின்ற முட்டாள்கள்…. ஏன்னா..! நான்  தப்பா சொல்லல முட்டாள்களுன்னு… ஈ.வே.ராவே கூட்டத்துல சொல்லுவாரு. நான் சின்ன வயசுல கேட்டிருக்கேன்…  எனக்கு முட்டா பசங்க தான் வேணும்னு. அதனால அந்த மாதிரி இருக்குறவங்கள பேசுறத வச்சுக்கிட்டு, யூடுப் ல பரபர சில பொய்களை வச்சுக்கிட்டு,  நாம பேச வேண்டாம். அந்த ஜட்ஜ்மெண்ட்ல என்ன சொல்லி இருக்கு ? Governor is the Chief Executive of a State. கவர்னர்க்கு இணையான நிர்வாகியா கூட முதல்வர் இருக்க முடியாதுன்னு அரசியல் அமைப்பு சட்டம் சொல்லுது.

1979 சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட். கேஸ் நம்பர் 603. அதுக்கப்புறம் அவங்க என்ன சொல்றாங்க ? கவர்னர் ஒருத்தர பார்த்து சந்தோஷப்பட்டார்ன்னா….   அவர் மந்திரியா இருக்கலாம்,  இல்லனா மந்திரி இல்லை எந்திரின்னு  கான்ஸ்டியூசன் சொல்லுது. ராஜா சொல்லல… அதனால 1979 ஜட்ஜ்மெண்ட்டை கவர்னரை விமர்சிக்கிற முட்டாள்கள் படிக்கணும்ங்குறேன் நான்.

அதற்கு அடுத்து… அதுல  என்ன சொல்றாங்க ? The Governor has the power to remove any individual Ministers. ஆகவே அரசியல் சட்டம் தெளிவாக இருக்கு. சீஃப் மினிஸ்டர் முதன்மை எக்சிகியூட்டி இல்ல கவர்னர் தான் என தெரிவித்தார்.