அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சால் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இருப்பினும், அனுபவ வீரர் டேவிட் மில்லர் (63) மற்றும் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் (45) ஜோடி 97 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தது.
இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய பும்ரா 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தற்போது 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி தனது பேட்டிங்கைத் தொடர்ந்து வருகிறது
