
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் SGT தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலமாக காலியாக உள்ள சுமார் 1768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அனுமதியுடன் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் B.sc, M.sc degree மற்றும் பி எட் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 63 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://trb1.ucanapply.com/login என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.