திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் ரகுநாத பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சரண் ரகுநாத பாண்டிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.