இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தானா என்ற பகுதியில் பதினாறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு உடலில் ஆசிட் ஊற்றி எரித்துள்ளனர்.

சர்தானாவில் உள்ள குமரன் மொஹல்லாவை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் காணவில்லை என்று குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கே அருகே உள்ள காட்டில் சிறுமியின் சடலத்தை போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனர். சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.