செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, தமிழ்நாடு தன்னுயிர் கழகம் எல்லாவற்றிற்கும் தீர்வு வைத்திருக்கிறது. சும்மா பேசிவிட்டு நீட்டை கொண்டு வந்து பிளஸ் டூவில் வைத்துக் கொண்டால் ? எனக்கு பணம் கிடைப்பது அல்ல என்பது தீர்வு. நதிநீர் சிக்கலாக இருந்தாலும் சரி…  நான் சொல்கிறேன். இந்த பேருந்து துறையை நீங்கள் கையில் வைத்திருக்கின்ற வரையில் 48 ஆயிரம் கோடி கடன் வைத்திருக்கிறீர்கள்.

நீங்களா தீர்க்கப் போகிறீர்கள் ? உங்கள் அப்பன் சொத்தை வித்தா தீர்க்கப்போற ? 48 ஆயிரம் கோடியை…  12 கட்சிகள் இருக்கின்றன, எந்த கட்சியாவது எதற்காக நட்டம் வர வேண்டும் என்று கேட்க வேண்டாமா ?  நான் கேட்கிறேன்? மூன்று பேருந்து வைத்திருக்கிறவன்,  மூன்று வீடு வைத்திருக்கிறான்… மூன்று கூத்தியாள் வைத்திருக்கிறான். அவ்வளவு வசதி அந்த பேருந்திலே கிடைக்கிறது.

நீ 19, 000 பேருந்துகளை வைத்துக்கொண்டு,  48,000 கோடி கடனை வைத்திருக்கிறாய். நீ என்ன சொல்வாய் என்றால் ? பையன்களுக்கு நான் இலவசமாக பள்ளிக்கூடம் போவதற்கு வசதி செய்து கொடுக்கிறேன், பெண்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன் என சொல்வாய். அது மொத்தம் எவ்வளவு ? எனக்கு சொல்லு ? எத்தனை பேருந்துகள் அதற்காக ஓடுதுன்னு சொல்லு..

அதற்க்கு மானியம் கொடுத்து,  இவ்வளவு  ரூபாய் நாங்கள் பேருந்துக்கு செலவழிக்கிறோம் என  சொல்லு. மீதம் எல்லாம் என்ன ? உதிரி பாகம் வாங்குவதற்கு லஞ்சம், பழைய வண்டிகளை எல்லாம் மஞ்சள் பெயிண்ட் அடித்துவிட்டு,  புது வண்டி போல ஒட்டி….  எல்லா பேருந்துகளும் ரோட்டில் நிற்கின்றன. என்ன நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள் ? நான் கேட்கிறேன்…  உன்னால் வேலைக்கு ஆள் எடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.