
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, புதிய சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய நிறைய தொகுப்புகள் எங்களுக்கு வந்துள்ளது. இதனை SCRT ( மாநில கல்வியல் ஆராய்ச்சி கழகம் ) குழு அமர்ந்து, பரிசீலனை செய்து, யார் யாரை சேர்க்க வேண்டும் என்று அந்த குழு முடிவு செய்து, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வருடைய ஒப்புதலோடு புதிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு வரக்கூடிய பாடத்திட்டத்தில் இடம் பெறும்.
தமிழக பட நூல்களில் இடம்பெறுள்ள ”சனாதனம்” பகுதி நீக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதனால் அவரிடம் கேட்டு, அதற்கு பின்னாடி நீக்கப்படுமா ? இல்லையா ? என்பதை அவர் முடிவு செய்யணும். அவரும், தமிழக முதல்வரும் வருகின்ற பாடத்திட்டங்களில் இது குறித்த விஷயங்கள் எப்படி இடம்பெறும் என அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நமக்கு SCRT ( மாநில கல்வியல் ஆராய்ச்சி கழகம் ) அது தான் நம்முடைய பாடத்திட்டத்தை முடிவு பண்ணும். மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு எப்படி NCERT என்று இருக்கிறதோ, அதே போல நமக்கு SCRT. கருப்பு நாள் என சொன்னது தந்தை பெரியார். ஆனால் அதை இன்ப நாள் என்று சொன்னது பேரறிஞர் அண்ணா. அதனால் அண்ணா வழியில் தான் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.
அன்னைக்கு பெரியார் சொன்னதுக்குரிய காரணம்…. ஏன் கருப்பு நாள் என்று சொன்னார் என்றால் ? சுதந்திரம் கிடைப்பதை விட…. அதைவிட மிகப்பெரிய அடிமைத்தனம்…. ஜாதி என்று அடிமைத்தனத்தில் மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அதனால் நான் சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதா? அல்லது இந்த ஜாதிய அடிமைதன ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதா ? என்பதில் பெரியார் எடுத்துக் கொண்டது.
ஜாதிய அடிமைதனத்தை தான் முதலில் ஒழிக்க வேண்டும். அதனால் சுதந்திரம் இந்தியாவிற்கு கிடைக்கக்கூடிய இந்த விடுதலை என்பது இப்ப தேவையற்றது. அப்படி தான் பெரியார் அந்த கருத்தை சொன்னாரே ஒழிய, ஜாதி ஒழியனும் என்ற ஆழமான கொள்கையினுடைய வெளிப்பாடுதான். ஆனால் அண்ணா இதனை இன்ப நாள் என்று சொல்லி,விடுதலை கிடைத்த நாளை அண்ணா கொண்டாடினார். ஆக அண்ணாவை தொடர்ந்து நடத்துகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சி…. அதனால் விடுதலை என்பது மக்களுக்கு கிடைத்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.