இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) விடுமுறை காலண்டர் படி ஜூலை 2023-ல் வங்கிகள் 15 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகளில் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். தற்போது ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற பட்டியலை தெரிந்துக்கொள்வோம்.

# ஜூலை 5- குரு ஹர்கோவிந்த் ஜி பிறந்தநாள் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

# ஜூலை 6- MHIP நாள் (மிசோரமில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை-11- கேர் பூஜை (திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை 13 – பானு ஜெயந்தி (சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை 17 – யு டிரோட் சிங் டே (மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை 21- Drukpa Tshe-zi (சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை 28- அஷூரா (ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்)

# ஜூலை 29-முஹரம்(தாஜியா)- (திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ம.பி.,தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உ.பி., வங்காளம், புது தில்லி, பீகார், ஜார்கண்ட், ஹெச்பி போன்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.