ஆஸ்திரேலியாவில் மாயமான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், 15 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலையினால் உயிருடன் விழுங்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் அந்த நபர், ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.

மேலும் அவரைத் தேடும் பணியில் உள்ளூர் போலீசாரும் வனவிலங்கு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன கருவிகள் மூலம் அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டபோது, அங்கிருந்த இரண்டு பெரிய முதலைகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

“>

இதனைத் தொடர்ந்து, அந்த முதலைகளைப் பிடித்து சோதனையிட்டதில், சுமார் 15 அடி நீளமுள்ள ஒரு முதலையின் வயிற்றுக்குள் மனித உடல் உறுப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அது காணாமல் போன கெவின் டார்மோடியின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கோரமான சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை நடுக்கமடையச் செய்துள்ளன. சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் நீர்நிலைகளுக்கு அருகே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.