உத்தரபிரதேச மாநிலத்தின் ஹபூரில் பர்தௌடா சிஹானி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த  ஒரு பரபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாஷிம் என்ற மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பக்கத்து  கிராமத்தை சேர்ந்த பூரா என்ற இளைஞர் தார் காரில் வந்தார். அப்போது சாலையில் இருவரும் சந்தித்தபோது, பைக் காரை சிறிது தட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, லைன்மேன் ஹாஷிம் கோபம் அடைந்து, தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துவந்து, பூராவின் தார் காரை முற்றிலும் சுற்றி வளைத்து தாக்கினர்.

இந்த தாக்குதலில், தார் காரின் முன்பக்கம், கண்ணாடிகள் மற்றும் விளக்குகள் உடைந்தன. காரில் இருந்த பூராவை கம்பிகளால் அடித்ததோடு, தரையில் தள்ளி தாக்கினர். சம்பவத்தின் தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், ஹபீஸ்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பூராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

“>

 

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களைப் பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியினரிடம் பெரும் பதற்றத்தையும், வன்முறை சம்பவம் மீதான கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.