அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பொறுப்பை டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதில் தீவிரம் காட்டுகிறார். இதன் காரணமாக அமெரிக்காவில் சட்ட பூர்வ அங்கீகாரம் பெறாதவர்கள் கூட்டாட்சி அதிகாரத்தின் மூலம் தங்களுடைய அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இந்நிலையில் தற்போது ட்ரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய மசோதாவின் படி 41 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குல் நுழைய தடை விதிக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு மியான்மர், பூடான், பாகிஸ்தான், ஏமன், வெனிசுலா, சிரியா, சூடான், சோமாலியா, வடகொரியா, லிபியா, கியூபா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட 31 நாடுகளுக்கு கடுமையான விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கல்வி மருத்துவம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக கூட அமெரிக்காவில் நுழைவது சிக்கலை ஏற்படுத்தும்
