சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கல்கோட்டை பகுதியில் தம்பநாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் 14 வயது சிறுமிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தர்ராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் தங்கவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுந்தர்ராஜ், தங்கவேல் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் சுந்தர்ராஜுக்கு 3000 ரூபாய் அபராதமும், தங்கவேலுக்கு 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.