பிரபல தொழில் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். வீடியோவில், ஹோட்டலிலுள்ள பெரிய தோசைக் கல்லில் பிரபல தென் இந்திய உணவான தோசை சுடப்படுகிறது. அதன்பின் அவையனைத்தும் ஒவ்வொரு தட்டிலும் எடுத்து வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஹோட்டல் வெயிட்டர் ஒருவர், தன் ஒரு கையில் ஒன்றன் மேல் ஒன்றாக தோசையை வைக்கிறார்.
அதன்பின் மொத்தம் 13 தோசை தட்டுகளை ஒரே கையில் தாங்கியவாறு, வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று பரிமாறுகிறார். இந்த வெயிட்டரின் திறன்மிக்க செயலை ஒலிம்பிக் விளையாட்டில் அங்கீகரிக்க வேண்டும். இந்த மனிதர் அந்த விளையாட்டில் தங்கப் பதக்கத்தை பெறும் போட்டியாளராக இருப்பார் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.