
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவிநாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்(28), சூலூர் பகுதியை சேர்த்த சிரஞ்சீவி(19) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அவர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.