உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மனித முகங்களை வாய் சேர்த்து பேசுவது போன்று மிக எதார்த்தமாக வீடியோக்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்துகிறது.

அந்தவகையில் மோனலிசா ஓவியம் ராப் பாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் 7 மில்லினுக்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.