கோளாத்தூர் பகுதியில் கேக் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மளிகைக் கடை மற்றும் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோளாத்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் மாரிபாண்டி என்பவரிடம், மதுபோதையில் வந்த இரண்டு நபர்கள் கேக்குகளை வாங்கிவிட்டு முழுப் பணத்தையும் தர மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைக்காரர் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற நிலையில், அந்த நபர்கள் தங்களது நண்பர்களை வரவழைத்துக் கொண்டு கடையின் மீதும் வீட்டின் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்துச் சேதப்படுத்திய அந்தக்கும்பல், அப்பகுதியில் கடுமையான அமளியில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

“>

 

இந்தச் சம்பவம் குறித்துப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள ராஜமங்கலம் காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.