தற்போது சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள்தான் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி விட்டார்கள். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மிக மிகப் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி. இவருடைய கணவர் யுவராஜ். இவர் நடனம் ஆடுவதில் வல்லவர். நடிகை காயத்ரி சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, சித்தி 2 என்று பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர்களுக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாகியுள்ளார் காயத்ரி. ஐந்து மாதமாக உள்ள காயத்ரிக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா ? கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)