தமிழ் திரையுலகில் நேரம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தாலும் கடந்த 2014 தான் வருடம் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 12 வருடங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். மேலும் 12 வயது வித்தியாசம் உள்ள பகத் பாசிலை நஸ்ரியா தேர்வு செய்தது ஏன் கேள்வி எழுந்தது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதில் காதல் என்பதுதான்.

பெங்களூர் டேஸ் படத்தில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிடித்துப் போக காதலித்து வந்துள்ளனர். நஸ்ரியாவே வெளிப்படையாக பகத் பாசிலிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த அவரும் ஓகே சென்று விட்டாராம். அவர் சொன்னது நான் உங்களை ஒரு குழந்தை போல கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று கூற உடனே ஓகே சொல்லிவிட்டார் பகத் பாசில். இன்று வரை நஸ்ரியா அவருடைய காதலை சொன்ன விதம் பற்றி அடிக்கடி பகத் பேசிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.