மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது வழக்கம். அந்தவகையில் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி – ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சாவூர், திருச்சி மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம். திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், அரக்கோணம் – வேலூர் ஆகிய பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது