கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர்.

இதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பள்ளிகளில் ஹிஜாப் தடை செய்து சீருடை அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவு தவறு இல்லை என்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் கர்நாடக கல்வி அமைச்சர் அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து வரவேண்டும் எனவும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.