எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவரப்படுத்தும் வகையில் இந்திய ராணுவமானது பறக்கும் ஜெட் சூட்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ராவிலுள்ள இந்தியன் ஏரோஸ்பேஸ் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஜெட் சூட்களை டெமோ செய்து காண்பித்துள்ளார். கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங் அண்மையில் ஆக்ராவில் உள்ள நீர் நிலைகள், கட்டிடங்கள் மற்றும் வயல்களின் மீது இந்த ஜெட்பேக்-ன் செயல் திறனை விளக்கினார். ஜெட் சூட்டில் பறக்க வாயு(அ) திரவ எரிப்பொருள் உபயோகபடுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல இயலும். அதோடு ராணுவ வீரர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக பயணிக்கவும் இது உதவும். இதற்கிடையில் கிராவிட்டி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரௌனிங், ஆக்ராவிலுள்ள இந்திய ராணுவ பயிற்சி பள்ளியில் இந்த உடை குறித்த டெமோ செய்து காண்பித்தார். அதுமட்டுமின்றி  இந்திய எல்லைப் பகுதியில் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கவும், ராணுவத்தின் அவசரக்கால போக்குவரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும் இது பயன்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறிப்பாக எல்லை கண்காணிப்பை இந்த ஜெட்சூட் எளிதாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் ராயல் நேவி மற்றும் அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் முன்பே இந்த ஜெட் சூட்களை தங்களது பல கடற்படை செயல்பாடுகளில் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய ராணுவமும் ஜெட் சூட்களை பயன்படுத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.