இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

129.5 பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட மிக அதிகம் என்பது தெரியவந்துள்ளது. வரும் மாதங்களில் இதன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த அளவிற்கு வெப்பநிலை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.