ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு கட்டாயம் ரேஷன் கார்டு தேவை. அது மட்டுமல்லாமல் அரசின் சலுகைகளை பெற வேண்டும் என்றாலும் அதற்கு ரேஷன் கார்டு முக்கியமானதாகும். முன்பெல்லாம் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு ரேஷன் விநியோக அலுவலகத்திற்குச் சென்று மக்கள் நீண்ட நேரத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

ஆனால் தற்போது வீட்டில் இருந்து கொண்டு ரேஷன் தொடர்பான வேலைகளை எளிதில் முடித்து விடலாம். அதன்படி புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது,பெயர் இணைப்பது மற்றும் பெயர் நீக்குவது போன்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக முடித்து விடலாம். அதற்காக ஸ்மார்ட்போனுடன் இணை இணைப்பு மட்டும் தான் தேவை. தற்போது ஸ்மார்ட் போன் உதவியுடன் ரேஷன் கார்டில் இருந்து ஒரு நபரின் பெயரை நீக்குவதற்கு எளிய வழிமுறைகள் உள்ளன.

அதற்கு முதலில் TN PDS என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் மாநிலத்தை தேர்வு செய்து தகுந்த விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அந்த பெயரை தேர்வு செய்து கேட்கப்படும் ஆவணங்களை இணைக்க வேண்டும். இறுதியாக சப்மிட் பொத்தானை கிளிக் செய்தால் ரேஷன் கார்டில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டு விடும்.