தமிழ் சினிமாவில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா. சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்ததாக இவர்தான் ரசிகர்களை தன்னுடைய நடனத்தால் கட்டி போட்டு வருகிறார். வனமகன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் கஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அடுத்தடுத்த நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே கஜினிகாந்த் திரைப்படத்தில் சாயிஷா ஆர்யாவுடன் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா தனது மகளுடன் சேர்ந்து நடனமாடிய ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இரண்டு வயது கொண்ட அவரின் மகளின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sayyeshaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sayyeshaa)