தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் படம் நல்ல வரவேற்பை பெற்று நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது. இப்போது ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. ராம் சரண் கடந்த 2012-ல் உபாசனா என்பவரை திருமணம் செய்த கொண்டார்.

கடந்த ஆண்டு தன் மனைவி உபாசனா கர்பமாக உள்ளதாக ராம் சரண் தெரிவித்தார். இந்நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதியினருக்கு 11 வருடங்களுக்கு பின் பெண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.