உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ஏஞ்சல் எனும் படம் 80% முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் எனவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.