காஜல் அகர்வால் திரைத்துறையில் 16 வருடங்களுக்கும் மேல் நடிகையாக இருந்து வருகிறார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் சில படங்களில் பிஸியாக நடிக்கிறார் காஜல். அதே சமயத்தில் தமிழில் ஷங்கர் டைரக்டில் உருவாகும் இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் காஜலிடம் செய்தியாளர்கள் இந்தியன்-2 படம் குறித்து கேட்டிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த அவர், இந்தியன்-2 வித்தியாசமான படம். அப்படி ஒரு கேரக்டரில் நான் இதுவரையிலும் நடித்ததே இல்லை. இதற்கு மேல் கூறினால் என்னை படக்குழுவினர் கொன்றுவிடுவார்கள் எனவும் காமெடியாக காஜல் கூறியிருக்கிறார்.