அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகின்ற நிலையில் இது தொடர்பாக தற்போது அமைச்சரான ரகுபதி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர படாத பாடுபடுகிறார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக 11 முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

அதிமுக கட்சி தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரியவில்லை.கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நினைக்கும் போதே எடப்பாடி பழனிச்சாமிக்கு பயமாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஆதரவு ஓட்டுகள் கூட திமுகவுக்கு தான் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்து செல்வதற்கு தகுதி இல்லை. மேலும் பாஜக கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக அதனை ஆதரித்து வருகிறார் என்று கூறினார்.