டெல்லியில் சட்டசபை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலின் எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காததால் தான் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது என்று கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்தது. ஆனால் இம்முறை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பல தொகுதிகளிலும் பாஜக-விடம் தோல்வியடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஒரு வேலை ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால், மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.