தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களுடைய தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் கல்வித்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று, தங்களின் விவரங்களைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே ஹால் டிக்கெட்டுகளைச் சரிபார்த்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
