தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தவெக-வின் இந்த அபார வெற்றி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் சூழலில், பிரபல சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் ‘ அதில், “தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது முறைப்படி வெற்றி பெற்றவருக்கு தோல்வியை வழங்க முயற்சிப்பது ஒருபோதும் உண்மையான ஜனநாயகம் ஆகாது” என்று அவர் மிகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவரது கட்சி பெற்ற இடங்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், திருச்செல்வத்தின் இந்த கருத்து தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்போது, அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகச் செயல்படுவது ஆரோக்கியமான அரசியல் கிடையாது என்றும் அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக அல்லது ஆட்சி அமைக்கும் சக்தியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், இயக்குநர் திருச்செல்வத்தின் இந்த வெளிப்படையான ஆதரவு பேச்சு தற்போது தமிழக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
