தளபதி விஜய் தனது அரசியல் வருகையை முன்னிட்டு சமூக வலைத்தளங்களை, குறிப்பாக இன்ஸ்டாகிராமை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ள அவர், இளம் வாக்காளர்களையும் பெண் ரசிகைகளையும் கவரும் வகையில் தனது பதிவுகளைத் திட்டமிட்டு வெளியிட்டு வருகிறார்.

மேலும் சினிமா பிம்பத்தைத் தாண்டி, ஒரு தலைவராக மக்களுடன் நெருக்கமானத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், இளைஞர்களிடம் இருக்கும் தனது செல்வாக்கை வாக்குகளாக மாற்றவும் இந்தத் தளம் அவருக்குப் பெரிதும் உதவுகிறது.

இது குறிப்பாக, பெண் ரசிகைகளின் ஆதரவு ஒரு கட்சியின் வெற்றிக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள விஜய், அவர்களை ஈர்க்கும் விதமான நேர்த்தியான புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இது வெறும் சமூக வலைதளப் பயன்பாடு மட்டுமல்லாமல், ஒரு தெளிவான அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் மற்ற கட்சிகளுக்குப் போட்டியாக, நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை முழுமையாகத் தன் பக்கம் ஈர்க்க விஜய் எடுத்துள்ள இந்த முயற்சி, வரவிருக்கும் தேர்தலில் ஒரு முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.