
நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதிய நேரத்தில் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உண்டு உடலை காக்க வேண்டியது அவசியம்.