2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர், ‘விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும். தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும், தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுத்து வருகிறோம்’ என்றார்.

மேலும் நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது  இயக்கத்தில் இருக்கக்கூடாது என்றும் ஆனந்த் கூறியுள்ளார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.