நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. தமுமுக-வின் போராட்டத்தை தொடர்ந்து திருவாரூரில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதாக அறியமுடிகிறது. இதன் காரணமாக அவரது சென்னை T.Nagar வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.