தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதன்பின் இருவரும் அவர் அவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

சென்ற வருடம் தனுஷ் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஐஸ்வர்யா தற்போது ஆல்பம் பாடலை இயக்கி முடித்து லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கின்றார். தற்போது படத்திற்கான பணிகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனின் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருக்கின்றார். 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஹைடெக் வசதிகளுடன் கட்டியிருக்கின்றார். அந்த புதிய வீட்டுக்கு சமீபத்தில் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் குடியேறி இருக்கின்றார். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் பல லட்சம் செலவு செய்து ஹைடெக்காக அழகுப்படுத்தி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியது பற்றியும் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்தும் பிரபல ஆர்ஜே சா தனது youtube பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் சினிமாவிற்கு வந்ததுமே அவருடைய அலுவலகம் இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் அருகே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே இயக்குனர் மணிரத்தினம் அலுவலகம் அருகே அமைத்துக் கொண்டார் தனுஷ்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். ஜெயலலிதா, ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களின் வீடுகள் பக்கத்தில் வீடு கட்டி குடியேற ஆசைப்பட்டால் தனுஷ் இதனால் போயஸ் கார்டனில் ஒரு இடத்தை வாங்க வேண்டும் என முடிவெடுத்து வாங்க எண்ணினார். ஜோதிடத்தை அதிக நம்பும் ரஜினி பிரச்சினை எனக் கூறி அங்கு வீடு கட்ட வேண்டாம் என தெரிவித்திருந்தார். தனுஷ் தனது மாமனார் பேச்சை மீறி அந்த இடத்தை வாங்கினாராம். மேலும் வீடு கட்டவும் ஆரம்பித்தார்கள்.

இதற்கான பூமி பூஜையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். ரஜினி குடும்பத்தினர் பேசிய வார்த்தைகள் தனுஷ் குடும்பத்தை ரொம்பவே காயப்படுத்தியதாம். புதியதாக கட்டியுள்ள இடத்தின் மதிப்பு 80 கோடியும் வீட்டின் மதிப்பு 70 கோடி ரூபாய் என மொத்தம் 150 கோடி. இதனால் தனுஷ் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கின்றார். இதுபோல முன்னணி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 4, 5 காம்போவாக ஒப்பந்தமாகி வீட்டை கட்டி உள்ளார். ரஜினி வேண்டாம் என கூறியும் வீடு கட்டி தனுஷ் குடியேறியுள்ளார்.