பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, ‘முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ (MMRY) மிகப்பெரிய உதவியாக இருந்தது. சுமார் 1.5 கோடி பெண்களுக்குத் தலா ₹10,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது, தேர்தலையே தலைகீழாக மாற்றியது. இதே போன்றதொரு அதிரடித் திட்டத்தைத் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் அறிமுகம் செய்து, பெண்களின் வாக்குகளைத் தன் பக்கம் இழுக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் இந்த மூவ், தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்கூட்டியே மோப்பம் பிடித்த முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் திட்டத்தை முறியடிக்கத் தனது பாணியில் ஒரு மெகா அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார். மகளிருக்குச் சுயதொழில் தொடங்க அல்லது கடனுதவியாக ₹5,000 வழங்கும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மூலம் மாதம் ₹1,000 வழங்கி வரும் நிலையில், இந்த ₹5,000 கூடுதல் பலமாக அமையும் என்று திமுக நம்புகிறது. மோடியின் ₹10,000 Vs ஸ்டாலினின் ₹5,000 எனத் தமிழக மகளிர் வாக்கு வங்கி யாருக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதுதான் இப்போது தமிழக அரசியலின் ‘ஹாட்’ விவாதம்
