2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தற்போது அதிரடியான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய, ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிகாரிகள் யாரும் தங்களின் சொந்த மாவட்டங்களில் (Home District) தேர்தல் பணியில் இருக்கக்கூடாது என்பதிலும் ஆணையம் கறாராக உள்ளது.

இந்த உத்தரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் தேர்தல் பணிகளில் நேரடியாகத் தொடர்புடைய கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைவருக்கும் பொருந்தும்.

“ஒரே இடத்துல ரொம்ப நாள் இருந்தா செல்வாக்கு அதிகமாகிடும், அது தேர்தலை பாதிக்கலாம்” என்கிற ரீதியில் இந்த ‘கிடுக்கிப்பிடி’ ஆக்ஷனை ஆணையம் எடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் பணியிட மாற்றம் (Mass Transfer) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அரசு வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.