சண்டிகர் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு காரின் ஓட்டுநர், சாலையை கவனிக்காமல் ஸ்டீயரிங் மீதே கவிழ்ந்து தூங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.
காரை ஒட்டிச் சென்றபடியே விடாமல் ஹார்ன் அடித்தும், சத்தமிட்டு கூப்பிட்டும் அந்த ஓட்டுநர் கண் விழிக்கவே இல்லை. கார் தானாகவே அதிவேகத்தில் செல்வதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரலாம் என்ற அச்சத்தில் அலறினர்.
चंडीगढ़ हाईवे पर चलती गाड़ी में ड्राइवर सो रहा है pic.twitter.com/i3GEvtI97v
— tasan (@BeingGujjar1) January 4, 2026
தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டுவது இந்தியாவில் 20 முதல் 40 சதவீத விபத்துகளுக்குக் காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2025-ஆம் ஆண்டு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இதேபோல் தூங்கிய ஓட்டுநரால் ஒரு சட்டக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகமும் இங்கு நினைவு கூரத்தக்கது. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர்கள் தொடர்ந்து கொட்டாவி விடுவது அல்லது கண்களைத் திறக்க முடியாமல் திணறுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக வாகனத்தை ஓரம் கட்டி ஓய்வெடுக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அந்த ஓட்டுநர் இறுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டாரா அல்லது விபத்து ஏதேனும் நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
