நடப்பாண்டு பொங்கல் 2026 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் அனைத்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது வரை 93 சதவிகித வேட்டி சேலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், வரும் 15ஆம் தேதிக்குள் 100 சதவிகித வேட்டி சேலைகள் முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்தக் கொள்முதல் நடவடிக்கை, நெசவாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
