பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 100 நாட்களில் மட்டும் சுமார் 34 பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக, தற்போதைய பருவமழை மற்றும் வெப்பமான காலநிலை காரணமாகப் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இந்த திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் அரசு மற்றும் மருத்துவத் துறையினர் இதுகுறித்துத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதுடன், மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். பாம்புக் கடி ஏற்பட்டவுடன் முறையான மருத்துவ சிகிச்சையைத் தாமதப்படுத்துவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் பல நேரங்களில் மக்கள் பயத்தினாலோ அல்லது அறியாமையினாலோ போலி மருத்துவர்களிடம் செல்வதால், விஷம் உடல் முழுவதும் பரவி நிலைமை மோசமாகிறது. மருத்துவமனைக்குச் செல்வதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிடத் தாமதமும் சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் அல்லது மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

எனவே, பாம்பு கடித்தவுடன் எந்தவொரு சுயமருத்துவமும் செய்யாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘ஆன்டி-சினேக் வெனம்’ எனப்படும் விஷமுறிவு ஊசியைச் செலுத்திக் கொள்வதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே சரியான வழியாகும்.