படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்தில் தனியார் துறை சார்பில் 100 சிறப்பு முகாம்கள் நடத்தி 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு 100% உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்
