சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி மற்றும் ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியானது.
விமர்சன ரீதியாகப் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்றாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துச் சாதனை படைத்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
