பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் (Asim Munir) தற்பொழுது அந்நாட்டில் வெறும் ராணுவப் பாதுகாப்புப் பொறுப்பை மட்டும் கவனிக்காமல், சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நிறுவனங்களை இயக்கும் ஒரு மாபெரும் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டு அசுர பலத்துடன் வலம் வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்பொழுது ஊடகங்களில் வெளியாகி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தளபதி என்பது வெறும் மிலிட்டரி பதவி மட்டுமல்ல, அது அந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பில்லியன் டாலர் பிசினஸ் நெட்வொர்க் ஆகும். பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிமெண்ட் ஆலைகள், பேங்கிங் செக்டார், டெய்ரி ஃபார்ம், டிரான்ஸ்போர்ட் மற்றும் பில்லியன் டாலர் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் எனப் பல்வேறு துறைகளில் தங்களது வியாபாரத்தை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி அந்நாட்டின் மிகப்பெரிய பிசினஸ் குரூப்பாக உருவெடுத்துள்ளது.

பிரபல பாதுகாப்புத் துறை நிபுணர் ஆயிஷா சித்திகா தனது ‘மிலிட்டரி இன்க்’ (Military Inc) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அங்குள்ள ‘ஃபௌஜி பவுண்டேஷன்’, ‘பஹ்ரியா பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போலவே செயல்பட்டுப் பணத்தை வாரிக்குவித்து வருகின்றன.

குறிப்பாக கராச்சி, லாகூர் போன்ற பெரிய நகரங்களில் ‘டிஃபென்ஸ் ஹவுசிங் அத்தாரிட்டி’ (DHA) என்ற பெயரில் ராணுவம் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் தொழிலின் மதிப்பு மட்டும் பல பில்லியன் டாலர்களைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த பாகிஸ்தான் ராணுவ பிசினஸ் சாம்ராஜ்யத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள வேளையில், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் ஆசிம் முனீரின் இந்த அசுரத்தனமான பிசினஸ் நெட்வொர்க் குறித்த விபரங்கள் தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.